இறுதி யுத்தத்திற்கான காரணத்தை கூறும் மகிந்த..!

Sri Lankan Tamils Mahinda Rajapaksa Sri Lankan Peoples
By Dilakshan May 20, 2024 11:16 AM GMT
Report

பேச்சு வார்த்தைகளை நிராகரித்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதலைத் தொடர்ந்ததால் யுத்தத்தை முன்னெடுத்ததாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயமானது, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

 

விடுதலைப்புலிகளின் எழுச்சி

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சி பெற்றது.

இறுதி யுத்தத்திற்கான காரணத்தை கூறும் மகிந்த..! | No War Again Mahinda S Speach About Ltte

தற்கொலை மனிதக் குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது.

தற்கொலைக் குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தக் கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்கள் எனப் பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூர வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாகப் பலரைக் கொலை செய்த விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன்.

எதிர்த் தாக்குதல்

சகல வழிகளையும் நிராகரித்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதலைத் தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எதிர்த் தாக்குதலைத் தீவிரமாக முன்னெடுத்தோம்.

இறுதி யுத்தத்திற்கான காரணத்தை கூறும் மகிந்த..! | No War Again Mahinda S Speach About Ltte

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

ரஷ்யாவிற்கான அடுத்த இலங்கைத் தூதுவர் குறித்து வெளியான தகவல்

ரஷ்யாவிற்கான அடுத்த இலங்கைத் தூதுவர் குறித்து வெளியான தகவல்


கொடுமையான அனுபவங்கள்

நான்காவது ஈழப் போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலைப்புலிகள் அமைப்பில் பணயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

இறுதி யுத்தத்திற்கான காரணத்தை கூறும் மகிந்த..! | No War Again Mahinda S Speach About Ltte

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், காவல்துறை மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையணியின் பிரதானிகள் மற்றும் முப்படையினர் ஆகியோருக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை அதிபர் என்ற அடிப்படையில் கௌரவமளிக்கின்றேன்.

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம். ஆகவே, யுத்தம் பற்றி சிந்திக்கக் கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகின்றார்கள்.

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில்

உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015