ரஷ்யாவிற்கான அடுத்த இலங்கைத் தூதுவர் குறித்து வெளியான தகவல்
தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள ரஷ்யாவுக்கான (Russia) இலங்கைத் (Sri Lanka) தூதுவர் பதவிக்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப சிறிலங்கா அரசாங்கம் (Government of Sri Lanka) தீர்மானித்துள்ளது.
புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு (Russo-Ukrainian War) இராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே (Janitha A. Liyanage) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |