புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனையை நடத்தி மிரட்டுகிறது வடகொரியா
வட கொரியா இன்று (04) புத்தாண்டின் முதல் ஏவுகணை சோதனையை நடத்தியது.பியோங்யாங்கிலிருந்து வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பல பகுதிகளை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் சீனாவுக்கு வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமீபத்திய சோதனை நடந்தது.
இறுதியாக நடத்தப்பட்ட சோதனை
வட கொரியா கடைசியாக நவம்பரில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் தென் கொரியாவின் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு அது நடந்தது.

வட கொரியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியை அமெரிக்கா சிறைப்படுத்திய பின்னர் இன்றைய ஏவுகணை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் வாதம்
பல தசாப்தங்களாக, அமெரிக்காவின் ஆட்சி மாற்ற முயற்சிகளைத் தடுக்க அதன் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் அவசியம் என்று வட கொரியா வாதிட்டு வருகிறது.

இருப்பினும், தம்மிடம் அத்தகைய ஆட்சி மாற்றத் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |