கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் : மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை
கொரிய தீப கற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும முயற்சியில் வடகொரியா ஈடுபட்டு வருவது அதன் அண்மைக்கால செயற்பாட்டில் உறுதியாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இந்த மாதத்தில் 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை வட கொரியா ஏவுகணைகளை வீசி மீண்டும் சோதனை நடத்தியுள்ளது.
இது குறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒன்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி
வட கொரியா தனது தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி செவ்வாய்க்கிழமை சோதித்துப் பாா்த்தது.
கடல் பகுதியில் வீசப்பட்ட ஏவுகணைகளின் ரகங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை சேகரித்து வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் குற்றச்சாட்டு
1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.
அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் தென் கொரியாவும், ஜப்பானும் இணைந்து அண்மையில் நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |