வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன்
Jaffna
M A Sumanthiran
Sri Lanka Politician
Northern Province of Sri Lanka
By Thulsi
வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அவர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் முடிவைப் பொறுத்தது
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த விடயத்தை நான் முறையாக கட்சிக்கு அறிவிக்கவுள்ளேன்.
எனினும் எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது.
என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்