மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Theepan May 26, 2026 11:36 PM GMT
Report

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று முன் தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (26.05.2026) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

ட்ரம்பின் மரண உணர்வை அதிகரித்துள்ள வயதும் உயிர் அச்சுறுத்தல்களும்

ட்ரம்பின் மரண உணர்வை அதிகரித்துள்ள வயதும் உயிர் அச்சுறுத்தல்களும்

மக்களின் காணிகள் மக்களுக்கே

இதன்போது இடம்பெற்ற கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,

மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை | Northern Governor Request To Aruna Jayasekara

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய 'மக்களின் காணிகள் மக்களுக்கே' என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளாகிய அனைவரினதும் பொறுப்பாகும்” என கூறியுள்ளார்.

இதன் பின்னர் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.

அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரும் தமது துறைசார்ந்த காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

சாத்தியமற்ற ஆபிரகாம் உடன்படிக்கை முன்மொழிவு! ட்ரம்பின் திட்டத்திற்கு மறுப்பு

சாத்தியமற்ற ஆபிரகாம் உடன்படிக்கை முன்மொழிவு! ட்ரம்பின் திட்டத்திற்கு மறுப்பு

விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள்

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை | Northern Governor Request To Aruna Jayasekara

வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020