சுற்றறிக்கை புனிதமானது என்றால் மக்கள் ஆணை என்ன மலிவானதா? வடக்கு ஆளுநரின் அதிகார வெறி உச்சம்
ஒரு சுற்றறிக்கையை விமர்சித்து, அதைத் தூக்கி எறிந்தார் என்பதற்காக சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிஷோரின் மக்கள் ஆணையைப் பறித்திருப்பது அப்பட்டமான அதிகாரத் திமிராகும் இது ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு, திரைமறைவில் நடக்கும் மிக மோசமான சர்வாதிகாரப் படுகொலையாகும்.
மக்களால் வாக்குப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு நியமன ஆளுநர் தூக்கியெறியும் அதிகாரம் இவருக்கு எங்கே இருந்து வந்தது?
மாகாண சபைத் தேர்தலை நடத்தத் துப்பில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் அங்கே இல்லை. ஆனால், ஒரு ஆளுநரை வைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஆளும் சபைகளை ஒடுக்க மட்டும் அதிகாரம் பாய்கிறதா?
ஒரு காகிதத்தைச் சுருட்டி எறிந்ததற்காக, ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவியையே பறிப்பது என்ன மன்னராட்சி காலத்துத் தண்டனையா?
இங்கு கிழிந்தது NPP அரசின் "மாற்றுக் கொள்கை" முகமூடி
"நாங்கள் தூய்மையானவர்கள், புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டு வருகிறோம்" என்று மேடைக்கு மேடை முழங்கிய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் உண்மையான அராஜக முகம் இப்போது அம்பலமாகியுள்ளது.
வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் குரலை, தங்களுக்குக் கீழ்ப்படியாத அதிகார மையங்களை சகித்துக் கொள்ள முடியாத பேரினவாதத்தின் அசிங்கமான வெளிப்பாடு தான் இந்த நீக்கம்! மக்களாட்சி தத்துவத்தின் மீதே காறி உமிழும் அரசின் இந்த அராஜக நாக்குகளை, அவர்களின் போலி ஜனநாயக முகமூடிகளை அம்பலமாகியுள்ளது .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 12 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்