யாழில் நான்காவது நாளாகவும் தொடரும் அரச ஊழியர்களின் போராட்டம்
வட மாகாண அரசு சாரதிகள் சங்கம் யாழ்ப்பாணம் (Jaffna) - கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்துக்கு பிரதி பிரதம செயலரால் கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்றப் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய பின்னர், அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம்
இதனால் ஏமாற்றமடைந்த அரசு சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.
அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதம செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் கடந்த (03) திகதி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலர் அலுவலகத்துக்கு முன்பாக நான்காவது நாளாகவும் இந்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |