மொட்டும் யானையும் தேர்தலுக்கு தயார் இல்லை - சிறிநேசன்
SLPP
UNP
Sri Lankan local elections 2023
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரும் தேர்தலுக்கு தயார் இல்லை எனும் விடயம் வெளியாகியிருக்கின்றது.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொறி முறை
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உள்நாட்டு பொறி முறையை விரும்புகின்றார்கள் என அர்த்தமில்லாத கருத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியிருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி