ஈஸ்டர் தாக்குதலுக்கு எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் தெளிவானது. மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கம் புறக்கணித்தமையின் ஊடாகவே இத்தாக்குதல் இடம்பெற்றது.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எந்தவித பொறுப்பும் இல்லை என குறிப்பிட்ட அவர், தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களை தண்டிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.