பஸில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
basil
parliament
podujana peramuna
By Sumithiran
வெற்றிடமாக உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜயந்த கெட்டகொட ராஜினாமா செய்த பின்னர் வெற்றிடத்தை நிரப்ப முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஊடகங்களில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவசம், பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி