இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில்(israel) தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதற்றம் அதிகரித்த நிலையில் வெளியான அறிவிப்பு
இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டா இஸ்ரேலிலுள்ள இலங்கையர் தொடர்பில் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி , தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார். எஞ்சிய 30% விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.
தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்
இதனிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எம். எச். எம். என். பண்டார - தூதுவர்
வாட்ஸ்அப் எண் - +9471 664 0560
இ. ஆர். எம். எஸ். எச். ஏகநாயக்க - பிரதித் தூதுவர்
வாட்ஸ்அப் எண் - +9471 844 7305
வை. சி. நில்மினி அபேகுணவர்தன - ஆலோசகர்
வாட்ஸ்அப் எண் - +9471 683 3513
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
