தேசத்துரோகியாக சித்தரிக்க முயலும் அநுர அரசு : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசத்துரோக்கியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “கடந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நான் பேசிய இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் என்று நான் கூறிய சொல்லை வைத்துக் கொண்டு அரசாங்கம் மற்றும் அவர்களின் தோழர்கள் என்னை வீழ்த்தவும் அவதூறுப்படுத்தவும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியுள்ளனர்.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்த வரி
இந்தியாவுக்கு அமெரிக்காவினால் அதிகரித்த வரியை விதித்துள்ளதால் அந்த நாடு பெரும் இக்கட்டான நிலையில் இருப்பதாலும் நாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது துணை நின்றவர்கள் என்பதாலே நான் அவ்வாறு கூறினேன்.
அன்று நாடாளுமன்ற அமர்விலும் இந்தியாவின் பாரிய வரியை குறித்தே பேசப்பட்டது. அவற்றை அவதானித்தே அப்படி கூறினேன். இதை நான் ஒளிந்து சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தான் சொன்னேன்.
நாங்கள் சமூக ஊடகங்களில் அச் செய்தியை வெளியிட்டது தவறு. மேலும் அதில் நாம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் செய்திருந்தால் அதிகம் பரவலாக்கப்பட்ட செய்தியானதால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்தமை தவறு என்கிறது அரசாங்கம். இது இந்தியாவில் பரவலானதும் தவறு என்கிறது.
இந்த அரசாங்கம் என்ன செய்ய முயற்சிக்கிறது? பேச்சு சுதந்திரத்தை, சுயாதீனமாக கருத்து தெரிவிப்பதை வெளிநாட்டு இராஜதந்திரம் தெரியாதவர்கள் என்னை மட்டுப்படுத்த முயல்கின்றனர்.
அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளால் என்னை கட்டுப்படுத்த முடியாது. அவை அரசாங்கத்தின் புதிய வழியாகவும் தென்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
