கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய அநுர கட்சி உறுப்பினர் அதிரடி கைது!
கிராம உத்தியோகத்தர் ஒருவரை வாய்மொழியாக மிரட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(26) முந்தலம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மங்கள எலிய பிரிவைபிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
கடந்த 5 ஆம் திகதி பேரிடர் கடமைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, உறுப்பினர் வந்த ஒரு சிறிய லாரியுடன் மோதியதாகவும், பின்னர் சம்பந்தப்பட்ட உறுப்பினர் தன்னை வாய்மொழியாக மிரட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து முந்தலம் பிரதேச செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இதேவேளை, ஆம் திகதி நடைபெற்ற பேரிடர் குழு கூட்டத்திற்குப் பிறகு, உறுப்பினர் தொலைபேசியில் தன்னை வாய்மொழியாக திட்டியதாக கிராம உத்தியோகத்தர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று முந்தலம் காவல் நிலையத்தில் முன்னிலையான பின்னர் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |