எதிர்க்கட்சியாக உருவெடுக்க எத்தனிக்கும் ஜே.வி.பி!
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியாக மாற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவின் இந்திய பயணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினரின் இந்திய பயணம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி
இந்த பயணத்தை தொடர்ந்து, இலங்கைக்கான முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிறந்த அறிவை அனுரகுமார பெற்றிருப்பார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியாக மாற தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாகும் பட்சத்தில் சிறிலங்காவின் அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |