தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்குட்பட்ட மெதகம பிரதேச சபையின் பட்ஜட் தோற்கடிப்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டில் உள்ள மெதகம பிரதேச சபையின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று(29) ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
அஜித் பிரியந்த ரத்நாயக்கவின் தலைமையில் இன்று காலை கூடிய சபையில், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டன.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பு
வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, எட்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும், ஒன்பது உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சர்வசன பலய, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |