தேர்தல் திணைக்களத்திற்கு வந்து குவியும் முறைப்பாடுகள்
Election Commission of Sri Lanka
Election
By Sumithiran
8 months ago
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உட்பட இதுவரை 125க்கும் மேற்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவை நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் முறைப்பாடுகள்
எதிர்காலத்தில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாடுகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பவ்ரல் அமைப்பின் தகவல் அமைப்பின் தகவல்
இதேவேளை, தேர்தல் காலத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்அதிகளவான முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி