இஸ்ரேலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
United States of America
Israel
Israel-Hamas War
By Jaso
இஸ்ரேலில் கொல்லப்பட்டஅமெரிக்கர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதல்களில் குறைந்தது 22 அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆழ்ந்த இரங்கல்
"பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று புதன்கிழமை பிற்பகல் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

முன்னர் பைடன் வெளியிட்ட தகவல்
அதிபர் பைடன் இஸ்ரேலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 14 என்று தெரிவித்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
