மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் குதிக்கின்றனர் தாதியர்கள்
srilanka
strike
nurses
By Sumithiran
தமது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் நாடு முழுவதிலும் நாளையதினம் புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் 01 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் பதில் கிடைக்காததினால் இந்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டவேளை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து அவர் அளித்த உறுதிமொழிக்கு அமைய பணிபகிஷ்கரிப்பை தாதியர்கள் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி