சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்களுக்கு கொரோனா
srilanka
hatton
o-l-exam
By Vasanth
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த மூன்று மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் வட்டவளை பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி