சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு
Education
O/L Exam
By Vasanth
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி