யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த தகவலை யாழ். வைத்தியசாலை குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஓ பொசிட்டிவ் (O positive) குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குருதி தேவைப்படும் நோயாளர்
விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.
குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கியினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |