நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lankan Peoples
By Jaso
இன்று (29) நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 394 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், மற்ற எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதன்படி வைட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 397 ரூபாவாகவும், பிரிமியம் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 543 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 490 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 285 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட எரிபொருள் விலை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என CPC மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |