இந்திய துடுப்பாட்ட வீராங்கனை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
இந்தியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain) எனும் மகளிர் துடுப்பாட்ட வீராங்கனை, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒடிசா பிரதேசத்தை சேர்ந்த சடலமாக மீட்கப்பட்ட குறித்த வீராங்கனை கடந்த வியாழக்கிழமை அவரை காணவில்லை என கட்டாக்கிலுள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் அவரின் பயிற்சியாளர் புகாரளித்திருந்தார்
இந்த நிலையில், குருதிஜாதியா வனப்பகுதியில் அவரின் உந்துருளி தனியாக கிடந்திருப்பதை இன்று காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.
தூக்கில் தொங்கிய நிலையில்
அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வனப்பகுதியை ஆராய்ந்ததில் ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இதைக் கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இருப்பினும் மரணத்துக்கான காரணம் என்னவென்று காவல்துறை தரப்பிலிருந்து எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
