பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவர்கள் - விரைந்து சென்ற அதிகாரிகள்
Covid-19
Education
School
By Vasanth
பசறை தேசிய பாடசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இன்றையதினம் மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமுகமளிக்காத நிலையில் ஆசிரியர்களின் வருகையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இதனையடுத்து ஊவா மாகாண சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் பாடசாலைககு விரைந்து சென்றதுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு தொடர்வது என்பது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஊடகங்கள் எவையும் அனுமதிக்கப்படவில்லை.
4ம் ஆண்டு நினைவஞ்சலி