உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு...!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் நான்கு சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாலும் அமெரிக்காவை நோக்கும் ஐசையாஸ் சூறாவளி அச்சுறுத்தலாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 4.08 (4.1%) டொலராக உயர்ந்து 104.28 டொலராக நிறைவடைந்தது.
உச்சபட்ச விலை
அமெரிக்காவின் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.21 (3.6%) டொலர் உயர்ந்து 91.49 டொலராக உயர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இரு எண்ணெய் ஒப்பந்தங்களின் விலையும் பீப்பாய்க்கு 5 டொலரிற்கும் அதிகமாக உயர்ந்ததுடன் செப்டம்பர் 29 இற்கு பிறகான உச்சபட்ச விலையைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |