ஓமன் கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள்! UKMTO அறிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் வழியாகக் கடந்து சென்றபோது, இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக , இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று இந்தத் சம்பவங்களை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு கப்பல்களும், தாக்குதல்கள் நடந்த நேரத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
எனினும் UKMTO மையம் அந்தக் கப்பல்களின் பெயர்களையோ அல்லது அவற்றை யார் குறிவைத்தார்கள் என்பதையோ குறிப்பிடவில்லை.
இரண்டு எண்ணெய்க் கப்பல்கள்
ஆனால், நீரிணையில் தென்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் நேற்றிரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனது அறிக்கையில் , “நீர்வழியில் தறிகெட்டு ஓடிய இரண்டு சூப்பர்டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என கூறியுள்ளது.
கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்ல, தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.
ஆனால், பெருகிவரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் ஓமான் கடற்கரைக்கு மிக அருகில் அதைக் கடக்கத் தொடங்கியுள்ளன. இது, அந்த நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |