புதிய ஜே.வி.வி போத்தலில் பழைய வைன்: அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் எதிர்தரப்பு
நாணய நிதியத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாணய நிதியத்தை தஞ்சமடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பழைய வைன், ஜே.வி.வி எனும் புதிய போத்தலில் ஊற்றப்பட்டுள்ளதை போன்றே அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.11.2025) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் மேலும் கருத்து கூறிய அவர்,
திறந்த பொருளாதாரம்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய போது ஜே.வி.பியினர் அதற்கு எதிராக வீதிக்கு இறங்கி கொலைகளை செய்து, அரச சொத்துக்களை அழித்து இளைஞர்களை கொலை செய்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.

2022 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சியினராகிய நாங்கள் வலியுறுத்தினோம்.
ஆனால் அப்போது மக்கள் விடுதலை முன்னணியினர் சர்வதேச நாணய நிதியம் மரண பொறியே என்றும்,அதன்படி செயற்பட முடியாது. நாங்கள் கூறுவதன்படி எமது யோசனைக்கு அமைய கடனை வழங்குங்கள் இல்லையென்றால் கடன் தேவையில்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |