ஓமான் வளைகுடாவில் நிலநடுக்கம்
Earthquake
World
By Shadhu Shanker
a year ago
ஓமான் வளைகுடாவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கம் நேற்று(21) பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது
இதனை ஓமான் நாட்டின் பூகம்ப கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்க அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
— مركز رصد الزلازل (@emcsquoman) October 21, 2023
மேலும் இந்த நிலநடுக்கம் தெற்கு அல் ஷர்கியாவில் உள்ள சூர் விலாயாத் பகுதியில் இருந்து வடகிழக்கே 57 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதாக EMC அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி