தமிழர் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான கவிதைகளை வைத்திருந்தவர் கைது!
மட்டக்களப்பு(Batticaloa) - ஏறாவூரில், இஸ்ரேல்(Israel) நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை ஏறாவூர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் கொழும்பு நோக்கித் தொடருந்தில் பயணிப்பதற்காக சம்மாந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து ஏறாவூர் நகருக்குப் பிரவேசித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இதனையடுத்து அந்த நபர், சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய கவிதைகள் மீட்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |