கொழும்பில் பரபரப்பு - தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!
Srilanka
Colombo
recovery
Church
grenade
By MKkamshan
பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய காவல்துறையினர் இதனை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி