யாழில் காவல்துறை துரத்தி வந்த மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட விபரீதம்
யாழில் காவல்துறையினர் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்றுமாலை (31)யாழ்ப்பாணம் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில்,காவல்துறையினர் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம்
இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |