வவுனியாவில் வயலில் வேலை செய்தவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு
Vavuniya
Elephant
Death
Sri Lanka Elephants
By Sindu
வவுனியா, கனகராயன்குளம், பெரியமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (04) கனகராயன்குளம் காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் நெடுங்கேணி, பெரியமடு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
தனது வீட்டின் பின்புறமுள்ள வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில்,புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கனகராயன்குளம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி