ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையட சுற்றுலா பயனிகளுக்கு வாய்ப்பு
உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள உலக சுற்றுலா தின விழா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (23) மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்குமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் பங்கேற்புடன் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
உலக சுற்றுலா பயண தினம்
குறித்த கலந்துரையாடலில் அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் வரலாற்று ரீதியாக ஒரு முதன்மையான வரலாற்றைக் கொண்ட மன்னார் தீவின் சுற்றுலா பயணத்துறையை வளர்க்கும் நோக்கத்தோடு, வடமாகாண சுற்றுலா பணியகமும், மாவட்ட செயலகம், நகர சபை போன்ற திணைக்களங்கள் இணைந்து, மன்னார் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சுற்றுலா பயண தினத்தை இம்முறை மன்னார் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |