ரணிலின் பக்கம் தாவும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பலப்படும் ரணிலின் கரங்கள்!
நாட்டின் அரசியல் நிலவரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், கட்சி தாவும் நிலைப்பாடுகளும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிரணியில் இருந்து ரணில் தலைமையிலான அரசு பக்கம் செல்லும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலப்படும் ரணிலின் கரங்கள்
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகின்றது, இருப்பினும் உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தலும் இதுவரை வெளிவரவில்லை.
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் பக்கம் இணைந்தால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் பலம் வலுவடையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.