ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை

Easter Attack Sri Lanka Death
By Dharu Aug 14, 2026 01:13 PM GMT
Report

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அவர்களது எதிர்வாத நிலைப்பாடுகள் நேற்று (13) நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (14) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒவ்வொரு பிரதிவாதியும் எதிர்வரும் விசாரணைகளில் கடைப்பிடிக்கவுள்ள தமது எதிர்வாத நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று

பிரதிவாதிகளின் நிலைப்பாடு

அதன்படி, சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து தமது வாக்குமூலத்தை வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை | Opposition Testimony Begins In Easter Attack Case

மேலும் சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஆனால் தமது தரப்பில் வேறு சாட்சிகளை அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

  1. முதலாம் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. இரண்டாம் பிரதிவாதியான மொஹமட் சரீபுத் ஆதம் லெப்பை (ஹஜ்ஜி மாமா) குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. மூன்றாம் பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. நான்காம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் ஐந்தாம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.
  5. ஆறாம் பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக இருப்பதாகவும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  6. ஏழாம் பிரதிவாதியான மொஹமட் மன்சூர் மொஹமட் சனூஸ்தீன் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. எட்டாம் பிரதிவாதியான அப்துல் மனாஃப் மொஹமட் ஃபர்தௌஸ் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளார்.
  8. ஒன்பதாம் பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் மற்றும் 10ஆம் பிரதிவாதியான அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
  9. எனினும், 10ஆம் பிரதிவாதி சார்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  10. 11ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  11. 12ஆம் பிரதிவாதியான மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் 13ஆம் பிரதிவாதியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
  12. 14ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  13. 15ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளனர்.
  14. 16ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  15. இதற்கிடையில், 18ஆம் பிரதிவாதி உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  16. 19ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  17. 20ஆம் பிரதிவாதி வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  18. 21 மற்றும் 22ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
  19. 23ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  20. 24 மற்றும் 25ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்களது தரப்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை

எதிர்வாத நிலைப்பாடு

இவ்வாறு ஒவ்வொரு பிரதிவாதியும் தமது எதிர்வாத நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில், சிலர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன் மேலதிக சாட்சிகளையும் முன்வைக்கவுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை | Opposition Testimony Begins In Easter Attack Case

மற்றுமொரு தரப்பினர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளனர். அனைத்து பிரதிவாதிகளுக்கும் அவர்களுக்குரிய அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்வாத விசாரணையின்போது கடைப்பிடிக்கவுள்ள நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்த விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கின் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினசரி நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020