ரணில் எங்களுக்கான எந்தவொரு நீதியையும் பெற்று தரவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவலை
போராட்டத்தில் நாங்கள் எங்கள் உறவுகளை இழந்து துக்கத்தில் இருக்கையில் எங்கள் உறவுகளை மறித்து வெசாக் தினத்தை கொண்டாடுகின்றார்கள் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (25) நடைபெற்ற ஊடகச்சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணிலின் வருகையை கண்டித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி எங்களுக்கு தடையுத்தரவை தந்தார்கள்.
நினைவு கஞ்சி
ரணில் எங்களுக்கான எந்தவொரு நீதியையும் பெற்று தரவில்லை அவரிடமே நாங்கள் எங்கள் பிரச்சினையை ஒப்படைத்தோம்.
கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து கொண்ட நிலையில் அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே18 முள்ளி கஞ்சி வழங்கப்பட்டு வந்தது.
குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் காவல்துறையினர் கஞ்சியை காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்தும் உள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகள்
ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருவதுடன் இதுவரை எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர்.
இந்த நிலையில், ரணிலின் வருகையை முற்றுமுழுதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் ஆகிய நாங்கள் எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எதிர்த்து நிற்போம்.
நேற்றைய தினம் (24) தடையுத்தரவு வந்தபடியினால் எங்களுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியாத பட்சத்தில் இன்று அவரின் வருகையை நாங்கள் கண்டிப்பதை ஊடகம் வாயிலாக தெரிவிக்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |