கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு: வெளியான காரணம்
கனடாவில் (Canada) கடந்த 2018 இல் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றிற்கு காரணமென கைது செய்யயப்பட்ட இந்திய (India) நபரை நாடு கடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி கனடா சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் பேருந்து மற்றும் கனரக வாகனம் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஹாக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்தியதாக கனரக வாகனத்தின் சாரதியான ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கனடா குடியுரிமை
இந்தியாவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்த இவர் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
இந்த நிலையில், சந்தேக நபர் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த சந்தேக நபர் குற்றவாளி என உறுதியானது.
இதையடுத்து, அவரது குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |