யாழ். மாவட்ட காற்றின் தரம் தொடர்பில் பரிசோதனை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் உமாசுகி நடராஜா என்பவரால் காற்றின் தரம் தொடர்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், நிஷங்க பந்துல கருணாரத்ன, சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று (17) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே, மேன்முறையீட்டு நீதியரசர்களினால் மேற்படி உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்