நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக்குவதே குறிக்கோள் : மொட்டுவின் முன்னாள் எம்.பி சூளுரை
SLPP
Namal Rajapaksa
By Jaso
சிறிலங்கா பொதுஜன பெரமுன தொடுத்துள்ள இந்தப் போரில் 'மாற்றுத் திட்டம்' (Plan B) ஏதும் இல்லை என்றும், 2029-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னரோ நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக்குவதே தனது முயற்சி என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்னதெரிவித்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்சவே தனது ஒரே தேர்வு என்றும், இந்தப் போரை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டுவருவேன் என சமூகத்திற்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் அறிவிப்பேன் என்றும் கூறினார்.
இந்தப் போரை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தாலோ அல்லது அவரது அநியாயமான அரசியல் அதிகாரத்தாலோ இந்தப் போரை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி