முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Sarana Gunawardena Bribery Commission Sri Lanka Law and Order
By Sathangani Oct 06, 2026 06:42 AM GMT
Report

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தனவுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குவதற்கு நீதிபதியைத் தூண்டுவதற்காக, நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரது மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு 

மேல் நீதிமன்றத்தில் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குவதற்கு நீதிபதியைத் தூண்டுவதற்காக நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாய் வழங்க முயன்றதாக, இரண்டாவது சந்தேகநபரான சரண குணவர்தனவின் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Sarana Gunawardena S Wife Further Remanded

மேலும், முதலாம் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த கையடக்கத் தொலைபேசியைச் சோதனையிட்டபோது, வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவல் பரிமாற்றங்களில் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் விலைப்பட்டியல்களும் காணப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு 

அத்துடன், சம்பவம் தொடர்பான சில தகவல் பரிமாற்றங்கள் அழிக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பிட்ட குறியீட்டு முறையைப் பயன்படுத்தி தொலைபேசி ஊடாக தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Sarana Gunawardena S Wife Further Remanded

இதனிடையே, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், இருதரப்பினரும் முன்வைத்த அனைத்து விடயங்களையும் பரிசீலித்த நீதவான், பிணைக்காக முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களை விசேட காரணங்களாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026