உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள்: காசாவில் தொடரும் போரின் அவலம்
World
Israel-Hamas War
Gaza
By Dhilak
கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவின் (Gaza) கான் யூனிஸ் (Khan Yunis) நகரத்தில் இருந்து 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் போர் காரணமாக மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, குறித்த போர் காரணமாக 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்த மக்கள் தொகை
இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதம் என்பதுடன், 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இதுவரையில் மொத்தமாக 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்