கொழும்பு மாநகர சபையில் பில்லியன் கணக்கான மதிப்பீட்டு வரி நிலுவையில்
கொழும்பு மாநகர சபைப் (CMC) பகுதியில் 4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் COPA குழுவில் முன்னிலையான போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதன்படி முன்னர் பரிந்துரைகள் வழங்கப்பட்ட போதிலும், வரிக் கடனை மீட்கும் பணிகளில் சிறிய முன்னேற்றம் காணப்படுவதாகக் குறித்த குழுவின் தலைவர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்
குறிப்பாக, கோட்டை (Fort) பிரிவில் மாத்திரம் நிலுவையிலிருந்த 610 மில்லியன் ரூபாய் தொகையில், ஜூன் மாதத்திற்குள் 53 மில்லியன் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநகர சபை பிரதி பொருளாளர் நந்தன ராஜபக்ச பேசுகையில், “கடனை செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் கோட்டை பிரிவில் உள்ள 3,747 வரி செலுத்தத் தவறிய சொத்துக்களிலிருந்து இதுவரை ரூ148 மில்லியன் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலுவையில் உள்ள இந்த வரிக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வசூல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் முதல்வர் விராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazar) குழுவுக்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
