எமது முடிவில் மாற்றமில்லை : அடித்துக் கூறுகிறார் காரியவசம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் முடிவில் மாற்றமில்லை என்று அந்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்(sagara kariyawasam) தெரிவித்துள்ளார்."எங்கள் வேட்பாளரை வரும் நாட்களில் வெளிப்படுத்துவோம்," என்றும் அவர் கூறினார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உண்மையான நோக்கம் தெரியாத எம்.பிக்கள்
கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச்(Ranil Wickremesinghe) சந்தித்த 92 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்திற்கு கட்டுப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவின்(Prasanna Ranatunga) அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தின் உண்மையான நோக்கம் தெரியாமல் இருந்ததாக காரியவசம் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகரின் அறிவிப்பு
“விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் கூட்டம் என்று அவர்களில் பாதி பேருக்குத் தெரியாது. அங்கிருந்த பெரும்பாலான எம்.பி.க்கள் அமைதி காத்தனர். ஒரு சிலர் மட்டுமே விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வெளிப்படையாக உறுதியளித்தனர் அல்லது சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசினர்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச(Ajith Rajapakse) தனது ஆதரவைப் பெறுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) தொடர்பு கொள்ளுமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார். அவர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், ஜனாதிபதி, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன்(Dinesh Gunawardena) இணைந்து மகிந்த ராஜபக்சவை சந்திக்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |