மக்கள் வெள்ளத்தில் திழைக்கும் பேரணி! உணர்ச்சிப் பெருக்குடன் தாயக உறவுகள் பேராதரவு
srilanka
p2p jaffnaprotest
By Vasanth
சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க பேரினவாத அரசுகள் செய்யும் இன விரோத செயற்பாடுகளை கண்டித்து தொடரும் பேரணி யாழ். மாவட்டத்தை வந்தடைந்தது.
வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் நாங்கள் பெரும்பான்மை மக்கள். தமிழினம் என்றொரு இனம் இத் தீவில் உள்ளனர் என்பதனை சர்வதேசத்தின் செவிக்கு செல்லும்வரை இன உரிமைக்கான போராட்டம் ஓயப்போவில்லை என்பதனை உணர்த்தி பேரணி உணர்ச்சிப் பெருக்கோடு யாழை வந்தடைந்தது .
கட்டுக்கடங்காத காட்டாறு போன்றே பேரணி மக்கள் வெள்ளத்தில் திழைக்கின்றது.
வீதியின் இரு மருங்கிலும் ஆதரவு கொடுக்கும் தாயக உறவுகளால் முன்னேறிச் செல்கின்றது பேரணி.




4ம் ஆண்டு நினைவஞ்சலி