வலையில் சிக்கிய அரியவகை மீன் : கோடீஸ்வரரான மீனவர்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு வலையில் சிக்கிய மீனால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச் என்ற மீனவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
ஹாஜியும் அவரது குழுவினரும் கடந்த திங்கட்கிழமை அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.
அரியவகை மீன்
கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.
இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது.
7 கோடி ரூபாய் பணத்தை
ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிடைத்த 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.