இம்ரான்கானைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் சிறைத்தண்டனை!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று (31) ஊழல் செய்ததாக இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானின் மனைவிக்கு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக இருவர் மீதும் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
பிணை கிடைக்கவில்லை
அதுமாத்திரமன்றி, இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டநிலையில், தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேன்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் அவருக்கு பிணை கிடைக்கவில்லை.
அரச பதவி
இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று (30) நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 10 ஆண்டுகள் அரச பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |