இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!
Pakistan
Imran Khan
World
By Shadhu Shanker
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள நிலையில் அவரை வேறு சிறைக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
70 வயதாகும் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது சமூக மற்றும் அரசியல் நிலை, உடல்நலம், என்பவற்றை கருத்திற் கொண்டு சகல வசதிகளுடைய சிறைக்கு மாற்றுமாறு இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் பின்னர் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி