பாகிஸ்தான் அதிபருக்கு இரண்டாவது முறையாக தொற்றியது கொரோனா
president
corona
pakistan
second time
By Jaso
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அதிபராக இருந்து வரும் ஆரிப் ஆல்விக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், எனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டன. அனைவரும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருங்கள்.
கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி