அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிறது பாகிஸ்தானின் தலைநகரம்
மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த ஆறு வார காலப் போரைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்லாமாபாத் தயாராகி வருவதால், அந்நகரத்தில் ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாகிஸ்தானின் தலைநகரில் முக்கிய அரசு கட்டிடங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிக்கு செல்லும் பிரதான வீதி மறிக்கப்பட்டுள்ளதுடன், நகரம் முழுவதும் இராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
அப்பகுதியில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டிற்குள் வந்த நகரம்
வெளியுறவு அமைச்சகத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள முக்கிய பகுதியில் அமைந்துள்ள, நகரின் ஹோட்டல்களில் ஒன்றான செரீனா ஹோட்டலில் , பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாகச் அடையாளமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வளாகத்தை முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர், மேலும் விருந்தினர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் நேற்று X தளத்தில் பதிவிட்டதாவது, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலும், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இணைந்தும் வரவிருக்கும் ஈரான் தூதுக்குழு வியாழக்கிழமை இரவு வந்தடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார், தற்போது அந்தத் தூதுக்குழு இன்று பிற்பகல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவும், போர் தொடங்குவதற்கு முன்பு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இன்று மாலை இஸ்லாமாபாத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |